மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.;
நாகை மாவட்டம் திருக்குவளை கொளப்பாடு அருகே காருகுடி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், நாகம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. 108 வகையான மூலிகை திரவியங்கள், நவதானியங்கள், பழ வகைகளை கொண்டு யாக பூஜைகள் நடந்தன. இதையடுத்து புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.