ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம்
ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.;
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் சின்னபெரமன்காடு பகுதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி ஜெயவீர ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக ஜெயவீர ஆஞ்சநேயரின் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.