பிளாஞ்சேரி சிம்ஹாருட வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

ஆவணி மாத பஞ்சமியையொட்டி பிளாஞ்சேரி சிம்ஹாருட வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-08-21 20:24 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் சிம் ஹாருட வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். பஞ்சமி தினமான நேற்று காலை சிம்ஹாருட வராகி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பினனர் அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் உள்பட பலர் செய்தனர். இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் வாழை இலையில் பச்சரிசி கொட்டி அதில் தேங்காய், நெய், தீபம் ஏற்றி ஏராளமான பெண்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்