சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
சுசீந்திரம்:
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் திகழ்கிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு மாதந்தோறும் ஆஞ்சநேயருக்கு மூலம் நட்சத்திரத்தன்று வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோன்று நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.