அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-07-07 18:07 GMT

புன்னம் பகுதியில் உள்ள புன்னை வன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் ஆனி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் நஞ்சை புகழூர், குந்தாணிபாளையம் நத்தம் மேடு, திருக்காடுதுறை உள்பட நொய்யல் சுற்றுவட்டாரத்தில் சிவன் கோவில்களில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தோட்டக்குறிச்சி சேங்கல்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கசங்கிலி மோதிரம், வளையல்கள் ஆகியவற்றை பூஜையில் வைப்பதற்காக கொடுத்தனர். இதேபோல மண்மங்கலம், காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்