சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானுக்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிடாரி அம்மன் மற்றும் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதேபோல் சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்தருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று முனிவர் கோலத்தில் சித்தர் அருள்பாலித்தார்.
வேட்டையன் பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றிலையை கொண்டு அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலை சூட்டி சிறப்பு தீபாராதணை காட்டப்பட்டது. வெற்றிலை மலர் மாலையுடன் அம்பாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.