சனி பிரதோஷத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனி பிரதோஷத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-07-01 18:45 GMT

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள பிரசித்திபெற்ற விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சட்ட கணேசன் செய்திருந்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி மந்தைவெளி ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் உள்பட கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்