சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கூடலூர்
மாதந்தோறும் சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று சஷ்டி தினத்தை ஒட்டி கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பகல் 11 மணிக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது, இதேபோல் நந்தட்டி, சந்தன மலை உள்பட அனைத்து கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதே போல கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில், நட்டக்கல் முருகன் கோவில் மற்றும் தங்கமலை முருகன் கோவில்களிலும் மாதாந்திர சஷ்டி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜைகளில் விரதமிருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.