அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-07-18 20:32 GMT

சிவகாசி,

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இருக்கன்குடி

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல எண்ணற்ற பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிறப்பு பூஜை

சிவகாசி ரிசர்வ்லைன் உமாமகேஸ்வரி கோவில் உள்பட சிவகாசி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதேபோல வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த மார்க்கநாதபுரம் கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோவில், ஏழாயிரம் பண்ணை சீர்காட்சி பத்திரகாளி அம்மன் கோவில், கீழ செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், தாயில்பட்டி பச்சையாபுரம் தெற்கு தெருவில் உள்ள கழுவுடை அம்மன் கோவில், அழகு பார்வதி அம்மன் கோவில், வெம்பக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

ஆலங்குளம்

ஆலங்குளம் காளியம்மன் கோவில், ராசாப்பட்டிகாளியம்மன் கோவில், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கீழாண்மறைநாடு காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன் கோவில், சமுசிகாபுரம் கருமாரியம்மன் கோவில், வி.புதூர் காளியம்மன் கோவில், கீழராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில். உப்பு பட்டி காளியம்மன் கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், காக்கிவாடன்பட்டி, எஸ்.ஆர்.காலனி காளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அதேபோல ராஜபாளையம், திருச்சுழி, காரியாபட்டி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், தளவாய்புரம், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்