விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்:
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், புனவாசல் மழுப்பெருத்த விநாயகர் கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேளுக்குடி அச்சம் தீர்த்த விநாயகர், பழையனூர் வெள்ளை விநாயகர், லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜவிநாயகர், அதங்குடி நவசக்தி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி ராஜ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.
இதேபோல் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் மேலராஜவீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் விநாயகர் உள்பட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.