அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி சிவன் கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றி அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், இனிப்பும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.