வீழிநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2023-10-10 18:45 GMT

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவிலில் நேற்று கார்த்தியாயினி அம்பாள், கல்யாண சுந்தரேஸ்வர சாமிக்கு மாதாந்திர மக நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் சாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கார்த்தியாயினி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்து, 1000 வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்