வைத்தியநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

வைத்தியநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-04-22 19:11 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் குரு பகவானுக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பிறகு குருவுக்கு பிடித்த பிரசாதங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளை ரகு பட்டர், ரமேஷ் பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு நடத்தினர். குருபெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜவகர் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்