திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத்தையொட்டி திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது;
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே திருவிடைக்கழி கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. திருவிடைக்கழி கோவிலில் சிவபெருமானை பூஜித்த நிலையில் முருக பெருமான் அருள் பாலிக்கிறார். இத்தலம் திருச்செந்தூருக்கு நிகராக போற்றப்படுகிறது. மேலும் முருகன், தெய்வானை திருமண நிச்சயம் நடைபெற்ற தலமானதால் இங்கு வழிபடுபவருக்கு, திருமணத்தடை நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம். சிறப்புமிக்க இந்த கோவிலில் தைப்பூசத்தையொட்டி சுப்பிரமணியசாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.