ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பொறையாறு:
பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பால், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் ஆய்வாளர் பத்ரி நராயணன், செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.