சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு;
திருக்கடையூர்:
திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாதம் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பழ வகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.