செம்பொன் அரங்க பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாங்கூர் செம்பொன் அரங்க பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-04-15 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் செம்பொன் அரங்கர் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். தமிழ் புத்தாண்டை ஒட்டி நேற்று முன்தினம் இரவு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் வருடத்திய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு, பானகம் நீர் மோர் நெய்வேத்தியம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்களுக்கு புதிய வருட பஞ்சாங்கம் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தலத்தார் ரகுநாதன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்