பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

வேளுக்குடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-17 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதே கோவிலில் தனி சன்னதியில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமிக்கு வடமாலை, அருகம்புல் மாலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்