பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-03-11 18:47 GMT

தோட்டக்குறிச்சி அருேக சேங்கல்மலையில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்ேகாவிலில் மாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்