நெகமம் அருகே நாகசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நெகமம் அருகே நாகசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நெகமம்
நெகமம் அருகே உள்ள ஆண்டிபாளையம் அடுத்த மஞ்சம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாட கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் 28-ம் ஆண்டு விழா சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், குங்குமம், கனிவகைகள் மற்றும் பல்வேறு திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்று. சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து இருந்தனர்.