வார வெள்ளியையொட்டி மாதேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு
வார வெள்ளியையொட்டி மாதேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல்
கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் வார வெள்ளியையொட்டி சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாதேஸ்வரி, மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.