கழுகுமலை சீனிவாச சரவணபெருமாள் கோவிலில் சிறப்புவழிபாடு

கழுகுமலை சீனிவாச சரவணபெருமாள் கோவிலில் சிறப்புவழிபாடு நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள அக்கினி குண்டத்தில் எள், எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கழுகாசலமூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்