இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தை கடைசி ஞாயிற்றுக்கிழமையைெயாட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-02-12 19:18 GMT

சாத்தூர், 

தை கடைசி ஞாயிற்றுக்கிழமையைெயாட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

ெதாடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பாதயாத்திரை

பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், காதுகுத்தி மாவிளக்கு எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மயில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்