இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-10 19:17 GMT

சாத்தூர், 

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில்

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகில் பத்திரகாளியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்