கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர். சீதாதேவி சமேதராக கோதண்டராமர் எழுந்தருளி கோவிலில் வலம் வந்தார்.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.