காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு: குமரி அனந்தன் பங்கேற்பு

கவுந்தப்பாடி காந்தி கோவிலில் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குமரி அனந்தன் கலந்து கொண்டார்.

Update: 2022-10-02 20:48 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையத்தில் காந்தி கோவில் உள்ளது. மேலும் விநாயகர் சிலை, கஸ்தூரிபாய் காந்தி சிலையும், நவக்கிரகங்களும் உள்ளன. இங்கு தினமும் 2 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

காந்தி ஜெயந்தியையொட்டி பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்திருந்தனர். பின்னர் காந்திக்கும், கஸ்தூரிபாய் காந்திக்கும் பால், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காந்தி, கஸ்தூரிபாய் காந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

குமரி அனந்தன்

மேலும் தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோவிலில் தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்