சதுர்வேதவிநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலத்தில் உள்ள சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-09-24 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை யாக சாலை பூஜைகளும், அதனை தொடர்ந்து சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்