ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மார்கழி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், வில்வபொடி, மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.