அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
ஆலங்குளம்,
சோழபுரம் ஊராட்சி ஆவரந்தை மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், கயிறு குத்துதல், சிறப்பு வழிபாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.