ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

உலக நன்மை வேண்டி ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-09-02 18:45 GMT

திருக்கடையூர்:

ஆக்கூரில் முக்கூட்டு மெயின் ரோடு அருகில் பழமை வாய்ந்த முத்து முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள முத்து முனீஸ்வரனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும் ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முனீஸ்வரரை வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆவணி மாத சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று உலக நன்மை வேண்டி 108 இளநீர் கொண்டு முத்து முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி முனீஸ்வரருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்