வேப்பனப்பள்ளி அருகேகீரம்மா கோவிலில் சிறப்பு வழிபாடு

வேப்பனப்பள்ளி அருகே கீரம்மா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-10-01 19:30 GMT

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே தமிழக- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கீரம்மா கோவிலில் நேற்று இருமாநில நட்புறவை போற்றும் வகையில் 2 மாநில மக்கள் இணைந்து சிறப்பு வழிபாட்டை நடத்தினர். சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. மேலும் உற்சவர் சன்னதியில் அமைத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் வேப்பனப்பள்ளி, உண்டிகைநாத்தம், அரியனப்பள்ளி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஒ.என்.கொத்துர், சீனிவாசபுரம் கிராமத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்