ஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-08-09 19:45 GMT

தர்மபுரி

ஆடி கிருத்திகையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணி சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாப்பாரப்பட்டி

இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், கடைவீதி சுப்பிரமணி சாமி கோவில், கோட்டை சண்முகநாதர் சாமி கோவில், கடைவீதி சிவசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோன்று இண்டூர் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சாமி கோவில், லளிகம் தண்டாயுதபாணி சாமி கோவில், பள்ளிப்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில், கம்பைநல்லூர் சிவசுப்பிரமணியசாமி கோவில், அடிலம் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி திருவிதி உலாவும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்