பெரம்பலூரில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) ஹரே கிருஷ்ண பிரசார மையம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மேரிபுரத்தில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடந்தது. விழாவை முன்னிட்டு ஹரிநாம சங்கீர்த்தனம், ராதா மதனகோபாலருக்கு மகா அபிசேகம், ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடந்தது. இஸ்கான் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதானந்த சைதன்யதாஸ பிரபு கிருஷ்ண அவதாரம் பற்றிய சிறப்பு உபன்யாசம் நடத்தினார். குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இஸ்கான் அமைப்பின் நிறுவனர் பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரின் 125-வது ஆண்டு வியாச பூஜை திருவிழா பெரம்பலூரை அடுத்த செஞ்சேரியில் துறையூர் சாலையில் உள்ள ஹரேகிருஷ்ணா கோவில் வளாகத்தில் நடக்கிறது.