தேவாங்குகள் குறித்த சிறப்பு பயிற்சி

அய்யலூர் வனப்பகுதியில் தேவாங்குகள் குறித்து வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-02-05 19:00 GMT

மராட்டிய மாநிலம் சந்திரபுரி வனஉயிர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் 47 வனச்சரக அலுவலர்கள், நிறுவனத்தின் துணை இயக்குனர் சுகாஸ் படேகர் தலைமையில் தென்னிந்தியா முழுவதும் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் வரவேற்றார். அவர்களுக்கு தேவாங்கு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மாவட்ட வன அலுவலர் பிரபு, காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தகுமார், இந்திய அறிவியல் நிறுவனத்தின் மூலம் தேவாங்கு தொடர்பான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் ஆஷிஷா ஆகியோர் பயிற்சி அளித்தனர். அதன்பின்னர் பயிற்சி வனச்சரக அலுவலர்களை அய்யலூர் பீரங்கி மலையில் தேவாங்குகள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்று தேவாங்குகளின் குணாதிசயங்கள், உணவு முறை, வாழ்வியல், இனப்பெருக்கம் ஆகியவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்