ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி

ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Update: 2023-01-01 18:45 GMT

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து பயன்பெறலாம். பதிவு செய்து கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மேலும் இத்திட்டத்தின் மூலம், ஓராண்டிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். 6 வயதிற்கு உட்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளுக்கு காது நுண்துளை அறுவை சிகிச்சை இலவசமாக செய்து கொள்ளலாம். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட கருவியில் பழுது ஏற்பட்டாலோ அல்லது வேறு காரணங்களினால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ அவற்றையும் இத்திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையிலேயே இலவசமாக சரிசெய்து கொள்ளலாம். கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் நவீனரக செயற்கை கை அல்லது கால்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்கு மாவட்ட தொடக்க நிலை பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்