தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் சேவை..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னை- தூத்துக்குடி இடையே கூடுதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி வரும் 10, 12ம் தேதிகளில் சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
11, 13ம் தேதிகளில் சிறப்பு ரெயில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.