கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 25ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி முதல் நாளை வரை என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.
இந்நிலையில் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதை அடுத்து நாளை கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இரவு 8.30 மணிக்கும், கோவை சிறப்பு ரெயில் இரவு 11.30 மணிக்கும் சென்னைக்கு புறப்படுகிறது.