சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே வருகிற 22, 24ம் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கம்

மறுமார்க்கத்தில் கொல்லம்-எழும்பூர் (06128) இடையே வருகிற 23 மற்றும் 25-ம் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-12-21 13:28 GMT

சென்னை,

சென்னை எழும்பூர்-கொல்லம் (06127) இடையே டிச.22 மற்றும் 24-ம் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரெயில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 4.30க்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கத்தில் கொல்லம்-எழும்பூர் (06128) இடையே வருகிற 23 மற்றும் 25-ம் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில், கொல்லத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த சிறப்பு ரெயிலானது, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்