நாகர்கோவில், பெங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில்-வருகிற 25, 26-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது

நாகர்கோவில், பெங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் வருகிற 25, 26-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-10 23:22 GMT

சூரமங்கலம்:

சிறப்பு ரெயில்

நாகர்கோவில் - பெங்களூரு- கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06051) வருகிற 25-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக மறுநாள் காலை 4.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இங்கிருந்து 4.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு சென்றடையும்.

மேலும் பெங்களூரு கன்ட்டோன்மென்ட்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06052) வருகிற 26-ந் தேதி பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

திருவனந்தபுரம்- சென்னை

மேலும் திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06056) வருகிற 25-ந் தேதி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல் சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06055) வருகிற 26-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.33 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Tags:    

மேலும் செய்திகள்