அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

வந்தவாசியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

Update: 2023-03-31 12:24 GMT

வந்தவாசி

வந்தவாசி சன்னதி தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் இன்று நடைபெற்றது.

காலையில் பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் புதிய வஸ்திரம், பூ மாலைகள், ரூபாய் நோட்டு மாலைகள் அம்மனுக்கு சாற்றி சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதில் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்