திருப்பத்தூர்
திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் கோடைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். நூலகர் மகாலிங்கஜெயகாந்தன் வரவேற்று பேசினார். எழுத்தாளர் முத்துராமலிங்கம் எழுதிய அமெரிக்ககரி என்ற நாவல் குறித்தும், கவிஞர் ஆசை எழுதிய கொண்டலாந்தி என்ற கவிதை குறித்தும் பல புத்தகங்களை குறித்து கல்யாண கண்ணன் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் சேவுகமூர்த்தி, கவிஞர் லெட்சுமி, ஆசிரியர் சாமிநாதன், செல்வ ஆனந்த், பேராசிரியர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாராயணன் நன்றி கூறினார்.