மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. மவுலவி மீரான் தாவூது தலைமை தாங்கி தொழுகையை நடத்தினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஏழைகளுக்கு அரிசிஉள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.