கால பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கூடலூர்,
கிருஷ்ண ஜெயந்தி, கிருத்திகை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி மகாவிஷ்ணு, முருகன், காலபைரவருக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது. கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அருகே சக்தி முனிஸ்வரன் கோவில் வளாகத்தில் கால பைரவருக்கு இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.