காரியாபட்டி,
காரியாபட்டி என்.ஜி.ஓ, நகர் சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பல்வேறு பொருட்களால் கால பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.