தேய்பிறை அஷ்டமியையொட்டிபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-04-13 18:45 GMT

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீகால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக தேவாரப் பன்னிரு திருமுறைகள் பாடி ஸ்ரீகாலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள மங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், மஞ்சபுத்தூர் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில்களில் உள்ள பைரவர் சன்னதிகளிலும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்