அய்யப்ப சாமிக்கு சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சியில் அய்யப்ப சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அய்யப்பன்சன்னதி உள்ளது. இங்கு நேற்று கார்த்திகை மாதத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முன்னதாக அய்யப்ப பக்தர்கள் அதே பகுதியில் உள்ள கோமுகி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கு புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வநதனர். இதையடுத்து சாமிக்கு சந்தனம், இளநீர் உள்பட 108 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குமார் குருசுவாமி குழுவினர் செய்திருந்தனர்.