பெரியகுளம் பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள மலைமேல் கைலாசநாதர் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமி மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் அருகே ஈச்சமலையில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அப்போது கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு ருத்ராட்ச மாலை மற்றும் பச்சை துண்டு அணுவிக்கப்பட்டது. மேலும் நந்தீஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் பெரியகுளம் பாலசுப்ரமணியசாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவன் சன்னதிகளில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.