ஆறுமுகமங்கலம் இளையநயினார் கோவிலில் சிறப்பு பூஜை

ஆறுமுகமங்கலம் இளையநயினார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2022-06-12 16:02 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கொட்டாரகுறிச்சி குளக்கரையில் தொன்மை வாய்ந்த இளையநயினார் கோவில் உள்ளது. இங்கு மூலவரான முருகன் வள்ளி, தெய்வானையுடன் இளையநயினார் என்ற பெயரில் மயில் மீது வீற்றிருக்கிறார். இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை மற்றும் இளைய நயினாருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்