தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
பட்டிவீரன்பட்டி பகவதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது காலபைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் ஜோதிலிங்கேசுவரர் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர், அய்யம்பாளையம் அருள்முருகன் கோவில் வளாகத்தில் உள்ள பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.