பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை
ஓசூரில் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;
ஓசூர்
ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள ராகு, கேது மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதே போல மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனை, மகாதீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.